Saturday, March 31, 2012

ஒரு" உவ்வே" செய்தி


கோழி முட்டைகளில் எத்தனை வகைகள் உள்ளன தெரியுமா-? கேஜ் பிரி , பிரி ரேன்ஜ் ,ஊட்டசத்து செறிவூட்டப்பட்ட முட்டை, ஆர்கானிக் முட்டை, ஏன் சைவ முட்டை எனபலவகைகள் உள்ளன.
அதென்ன சைவ முட்டை என்கிறீர்களா? ஆம், எந்தவிதமான அசைவ பண்டங்களும் கலக்காது உள்ள கோழி தீவனங்களை மட்டும் உண்ணும் கோழிகள் இடும் முட்டை சைவ முட்டை எனப்படும்.
ஓமேகா&3 முட்டை இது கடல் உணவுகளில் மட்டும் கிடைக்கும் சத்தான ஒமேகா&3 அடங்கியது.
இதெல்லாம் இருக்கட்டும்ங்க .. .. .. சீனாவில் மிகப் பிரபலமான ஒரு முட்டை ரெசிபியை பின்வரும் இணைப்பை சொடுக்கி பாருங்களேன். குறிப்பு: சாப்பிட்டவுடன் இதனை பார்க்காதீர்கள்.



தகவல் அறியும் சட்டம்


     தகவல் அறியும் சட்டம் பொது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அரசு அலுவலகங்களில் தங்களுக்கு வேண்டிய நிவாரணம் பெற மிக எளிய வழி இது. தாங்கள் கேட்கும் விபரங்களை சம்பந்தபட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்களுக்கு தர கடமைப்பட்டுள்ளார். இதை மீறும் அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் வழி உள்ளது. 

       நாம் நமக்கு தேவையான விபரங்களை எப்படி கேட்பது-? அதற்கு என்ன கட்டணம்? எத்தனை நாட்களில் பதில் கிடைக்கும்? பதில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்பதில் இருந்து நமது மனு எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ள மற்றும் பல பல விசயங்களை இங்கு காணலாம்.

      ஓரே ஒரு குறை, இது தமிழ்நாடு அரசு இணையதளம் ஆனால் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. அரசு இதனை கவனித்தால் நல்லது.

மொபைலில் தமிழ்

தமிழ் தேடு பொறி

தமிழில் தட்டச்சு செய்து இணையத்தில் கலக்கலாம் வாங்க இங்கே
http://kandupidi.com/index.php

இணையத்தில் தமிழ், இதயங்கள் இணைய

தமிழில் இணையதளங்களில் உலா வர உதவும் இதனை பயன்படுத்துங்களேன்.
http://kandupidi.com/converter/                     

பார்க்க ரசிக்க

  கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? யாருக்கு தெரியும் பதில், ஆனால் இங்கு முட்டையிலிருந்து கோழி எப்படி வருகிறது என தெரிகிறது, பாருங்கள் ரசியுங்களேன்.
http://www.kalvisolai.info/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88   

Friday, March 30, 2012

மின்கட்டண உயர்வு, 37 சதவீதம்


மின்கட்டண உயர்வு விவரம்:
வீடுகளுக்கு...
* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,

* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)

* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80

* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3

* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3

* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.

* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75
* 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் கிடையாது.
புதிதாக நிலைக்கட்டணம்:

மின் பயன்பாட்டுக்கு புதியதாக நிலைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான நிலைக்கட்டண விவரம்:

* 200 யூனிட் வரை - ரூ.10

* 200 யூனிட்டுக்கு மேல் - ரூ.15

* 500 யூனிட் வரை பயன்படுத்தினால் - ரூ. 20

* தொழில் நிறுவனங்களுக்கான நிலைக் கட்டணம் ரூ.50
தொழிற்சாலைகளுக்கு..
தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.
வர்த்தக நிறுவனங்களுக்கு...

* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30

* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்
குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு...

* 500 யூனிட் வரை - ரூ. 3.50

* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4

வழிபாட்டுத் தலங்களுக்கு...

* 120 யூனிட் வரை ரூ.2.50

* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5

விசைத்தறி கூடங்களுக்கு...

* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.

* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4
கல்வி நிறுவனங்களுக்கு...

* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50

* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5

ஏனையவை...
* அலங்கார விளக்குகள் பயன்பாட்டுக்கு - ரூ.10.50

* உயர் அழுத்த மின் இணைப்புகளுக்கு - ரூ.5.50

* தற்காலிக உயர் அழுத்த மின் இணைப்பு பெறும் இணைப்புகளுக்கு - ரூ.9.50

* ரயில்வே பயன்பாட்டுக்கு ரூ.5.50

ஆசிரியர் தகுதித் தேர்வு

         தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் கல்வித் துறை சரியான அணுகுமுறையைக் கையாளாத காரணத்தால் பல இடங்களில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் சில இடங்களில் விண்ணப்பம் கிடைக்காததால் சாலை மறியலும்கூட நடைபெற்றுள்ளன.

3

Kolaveri against piracy
why this kolaveri-di? will be armed with a 'John Doe' order from the Madras High Court to protech it against piracy.

The film '3' has Dhanush, who has sung the 'Kolaveri' in the lead and is directed by Aishwarya Dhanush, his wife. The John Doe order must be making online pirates sing 'Why this kolaveri?'