Saturday, April 14, 2012

சிந்தியுங்கள்...!

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி''


பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இளவயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.
 இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!
 காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.
 ""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

Friday, April 13, 2012

சித்திரை 1


தமிழ் மகளே வருக! வளம் எல்லாம் தருக!!



Thursday, April 12, 2012

டைட்டானிக் - 100


டைட்டானிக் கப்பலினை பற்றிய சில அரிய புகைப்படங்கள்
1912 ஏப்ரல் 15ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து நியூயார்க் சென்ற போது தனது முதல் பயணத்திலேயே விபத்துகுள்ளாகி முழ்கி போனது. கப்பலில் 2224 பேர் சென்றதில் 1514 பேர் உயிரிழந்தனர்.

இக்கப்பல் கட்டி முடிக்கப்பட்டு 2 ஏப்ரல் 1912ல் அன்று தான் கடலில் டிரையல் பயணம் செய்தது. 10 ஏப்ரல் 1912, முதல் பயணத்தை ஆரம்பித்து 15 ஏப்ரலில் விபத்துக்குள்ளாகி முழ்கியது.

டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பித்த சில விநாடிகளிலேயே அது ஒரு விபத்தை சந்தித்து தப்பியது. அது புறப்பட்ட போது அருகில் இருந்த இரு சிறிய கப்பல்கள் டைட்டானிக்கோடு மோத இருந்தது. இரண்டுக்கும் இடையே 4 அடி வித்தியாத்தில் தப்பியது. இதனால் டைடானிக்கின் முதல் பயணம் தடுதலையோடு 1 மணி நேரம் தாமாதமாக ஆரம்பித்தது.

2224 பயணிகளுடன் 10 ஏப்ரல் 1912 தேதி சௌதாம்டன் துறைமுகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கும் முன் எடுத்தது.

கலிபோர்னியன் கப்பல் பனி மலையை கண்டு நடுக்கடலில் நின்றது. டைட்டானிக் அதன் வழியே செல்வதை கண்டு அதற்கு பனி மலையை பற்றி எச்சரிக்கை செய்தது. ஆனா£ல் டைட்டானிக் கப்பல் அதனை கண்டு கொள்ளவில்லை.

கடைசி லைப்போட் மூலம் தப்பித்து வந்தவர்கள்.

உயிர் தப்பியவர்களின் பட்டியலை பார்வையிட குழுமிய மக்கள் கூட்டம்.


டைட்டானிக் கப்பல் மோதிய பனிபாறை இதுவாகத் தான் இருக்கும் என நம்பபடுகிறது.விபத்து நடந்து ஐந்து நாட்கள் கழித்து எடுத்தப் படம்.

டைட்டானிக் முழ்கியதை பற்றிய இத்தாலிய பத்திரிக்கை செய்தி.

நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கை

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை

தற்போது டைட்டானிக்
டைட்டானிக் கப்பல் தனது பயணத்தை தொடங்கி (முடித்து) 100 ஆண்டுகள் ஆகிறது


 "2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய மாட்டேன்

"முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. அந்தக் கொள்கையைப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன. இதில் ஆ. ராசாவுக்குச் சமமாக ப. சிதம்பரத்துக்கும் பங்கு உள்ளது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அது பற்றி நான் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாதிடுவேன். 2ஜி வழக்கில் சிதம்பரத்தை எதிரியாகச் சேர்க்கும் வரை ஓய மாட்டேன்'' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்

Wednesday, April 11, 2012

'Padmasri’ Former


'அதி நவீன ஆராய்ச்சிக் கூடங்களில், கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து, பல பட்டங்கள் பெற்ற விஞ்ஞானிகளைக் கொண்டுதான் புதியனவற்றைக் கண்டு பிடிக்க முடியும்’ என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் கூற்றைத் தவிடு பொடியாக்கி இருக்கிறார், புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த விவசாயி வெங்கடபதி. கனகாம்பரம், சவுக்கு போன்ற பயிர்களில் புதிய ரகத்தைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியதால் இவருக்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, 'பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல். 

Tuesday, April 10, 2012

அரசு ஊழியர்கள் நினைத்தால் தமிழகம் ஒளிரும்


இந்தியாவின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் மேன்மேலும் உயர மின்சாரம் தேவை. நமது இந்திய அரசு அணு மின்சாரத்தில் அதிக நாட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. காரணம், தட்டுபாடற்ற மூலப்பொருள். நீர் மின்சாரத்திற்கு அல்லது அனல் மின்சாரத்திற்கு வேண்டிய நீரும் நிலக்கரியும் பற்றாக்குறை, விலை உயர்வு மற்றும் போக்குவரத்து சங்கடங்கள் பல பல தொல்லைகள் உள்ளன. 

ஆண் வதை



விலங்குகளை வதைத்து உணவுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து சைவ உணவு சாப்பிட சொல்லி பிராணி வதை தடுப்பு அமைப்பினர் பெங்களூரில் ஆர்பாட்டம் செய்தனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நங்கை இவள் ஆண்களை வதைப்பது தகுமா?

அவசரம்! பத்தாயிரம் பாம்புகளை பிடித்தவருக்கு உதவுங்கள்


பாம்பு கடியால் ஏற்பட்ட காயம்
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோயில் வீதியை சேர்ந்தவர் சினேக் முருகன் (53). 8 வயதில் இருந்தே அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பாம்புகளை லாவகமாக பிடித்து வருகிறார்.  இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார்.  இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோவை பூ மார்க்கெட் காமராஜபுரத்தில் ஒரு வீட்டில் கருநாகம் ஒன்று புகுந்திருந்தது. அதை பிடிக்க சென்றபோது அங்கு 10 அடி நீளமுள்ள கருநாக பாம்பு சுவற்றோரம் படுத்திருந்தது. பாம்பின் கழுத்தை பிடித்து அமுக்கியவாறு எழுந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

கிட்னி ஸ்டோன்


தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண் டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல். 

மின் கட் டணம் இந்த மாதம் எப்படி கணக்கிடப் படுகிறது


வீடுகளுக்கு மின் கட் டணம் இந்த மாதம் எப்படி கணக்கிடப் படுகிறது என்று அதி காரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த குற்றாலம் அருவிகள்.

குற்றாலம்: குற்றாலத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று அதிகாலையில் குறைந்ததை அடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது..

தென்காசி, குற்றாலம் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலம் என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது.

குற்றாலம் மற்றும் தென்காசி நகரங்களில் ஒரு துளி மழை கூட விழாத நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் ஐந்தருவி, மெயினருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை வெள்ளப்பெருக்கு தணிந்த நிலையில் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. வறண்டுபோய் கிடந்த பாறைகளை வெறுமையோடு பார்த்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தது குற்றாலம் அருவிகள்.

Wednesday, April 4, 2012

இந்த வார IPL

Thank you my son Naraen

50 கோடி பரிசு



syed

ஹபீஸ் சயீத் என்ற நபரை பற்றிய செய்தி யாருக்கேனும் தெரிந்தால் அவர்களுக்கு 50 கோடி பரிசு காத்திருக்கிறது. அதுவும் அமெரிக்க டாலர்களாகவே தரப்படும்.

பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்கள் போட்டு பேசும் இவனை

வாழ்த்துங்கள்.


எனது மூத்த மகன் சத்யா இன்று( tamil 2 paper )பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளான். இதை காணும் அன்பர்கள் அவனை வாழ்த்துங்கள்.

அஸ்ரா கார்க்கை மாற்றக் கூடாது


விருதுநகர் மாவட்டம் முழுவதும் இது போன்ற சுவரொட்டி தென்படுகிறது. அனாமதேய சுவரொட்டி தான். எனினும் பாதிக்க பட்ட யாரோ ஒருவர் தனக்கு நீதி அஸ்ரா கார்க் மூலம் கிடைத்ததையொட்டி தனது நன்றியை தெரிவிக்கும் முகமாக இதை ஒட்டியுள்ளார் போலும்.

எனக்கு தெரிந்து காவல்துறை வட்டத்தில் நல்ல பல முயற்சிகள் அஸ்ரா கார்க் செய்துள்ளார். நில மோசடி வழக்கில் ஒரு வி.ஐ.பி அல்லது முக்கியஸ்தர்....¢ இல்லைங்க பல நாட்கள் மாட்டாத ஒரு நபர் என்று சொல்வது தான் தகும் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும் அரசு பணியில் இருப்பவரை மாற்றக் கூடாது என பொது மக்கள் நினைக்கும் வண்ணம் செயல்படும் போது தான் அந்த பதவிக்கும் அவருக்கும் மரியாதையே தவிர அரசு கொடுக்கும் மெடல்கள் மற்றும் பிற ஆகியன எல்லாம் வெறும் சும்மா.


அலைபேசியில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது


செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது அவசரத்திற்கு உதவக்கூடிய 4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

Tuesday, April 3, 2012

பெரியார் பஞ்ச்


விவாதங்களை மறுக்கும்,முத்திரை குத்தி வசைபாடும், வெறுப்பை உமிழ்வதையே கருத்துப்போராக எண்ணும் இந்த மூர்க்கம் ஈ.வே.ரா உருவாக்கியது தான்.

ஈ.வே.ரா செய்வது அவருக்குத் தெரிந்த சில்லறைத் தகவல்களை வைத்துக் கொண்டு ஆங்காரத்துடன், வன்மத்துடன் மண்டையில் ஓங்கிப் போடுவது மட்டுமே

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி. க கூட்டம் நடந்தது .அதில் ஈ.வே.ராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர்.  ‘சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே ?‘ நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தைக் கேட்டேன்.  ‘இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள்?’என்றார் அவர். சரஸ்வதின்னா ஒரு சக்தி சார்.வீணை நாதத்திலேயும், பாட்டோட அழகிலேயும் அது இருக்குது.  நம் நாக்கிலும், புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம்.  கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்அவரு பாவம் வயசானவரு. படிச்சவர் கூட கெடயாது. ஏதோ சொல்லிட்டார். இவரு எம்மே படிச்சவர் தானே, இவருக்கு எங்கே போச்சு சார் புத்தி?” இது தான்  தமிழ் நாட்டில்இன்று ஈ.வே.ராவின் இடம்.

ஈ.வே.ராவின் முதல் பிரச்சினை அவர் எதைப் பற்றியெல்லாம் பேசினாரோ அதைப்பற்றி அவருடைய ஞானம் மிகக் மிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம்,பொதுவுடைமை குறித்துப் பேசுகிறார். அதைப் பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது. அவர் ஜாதி குறித்து கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் அதைப் பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற் கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காண முடியாது. அவர் மதம் குறித்தும், கடவுள் குறித்தும் பேசுகிறார், ஆனால் அவை குறித்த அவரது புரிதல் மிக சாதாரணமானது.

கோவை அய்யாமுத்து வின் சுயசரிதை. ஈ.வே.ராவின் நண்பராகவும், குடியரசு வெளியீட்டாளராகவும் இருந்த சர்வோதயத் தலைவர் அவர். அவர் காட்டும் ஈ.வே.ரா மரபான மனப் போக்கும், லெளகீக விவேகமும், சக மனிதர்களிடம் அபாரமான கனிவும் கொண்ட, அதே சமயம் மிகக் கறாரானதுடுக்குத்தனமும் , நிலையற்ற சிந்தனைப் போக்கும். கொண்ட, ஒரு மேலான மனிதர் மட்டுமே.

கூத்தாடிகள் கவனத்திற்கு


தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும்  உண்டாவுவதாக.

நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது.....

'தி சைக்கிளிஸ்ட்இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப்ஒளிப்பதிவாளர் செழியன்

விடுதலை பத்திரிக்கை செய்தி


திருச்சி&தென்னு£ர் உக்கிர காளியம்மன் கோவிலுக்கு தமிழகத்திலேயே இதுவரை எங்கும் இல்லாத அளவுக்கு ஒன்றரை டன் எடையில் ஆலயமணி தயாராகிறது.
திருப்பதியில் ராமநவமியன்று உண்டியல் வசூல் ரூ. 5.73 கோடி

Monday, April 2, 2012

தப்பை உணர்ந்தாரா தங்கை?


SK1 Days ago
>>டீ குடிக்க கேன்டீன் வந்த எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் சசி அறிக்கை விவரம் தெரிய ஆரம்பித்தது. பலருக்கு டீ உள்ளே இறங்கவே இல்லை<< எப்படி இறங்கும்??

Shahul1 Days ago
மறுபடியும் மொதல்ல இருந்தா! யாரு யாரோட சேர்ந்தா என்ன பிரிஞ்சா என்ன! மக்களுக்கு இதனால் என்ன நன்மை! நாம் ஒழைச்சா தான் நமக்கு சோறு! அதுகூட இப்ப நமக்கு நிரந்திரம் இல்லை ஏன்னா நம்ம நியாயமான ஒழைப்பையும் தான் இந்த அரசியல்வியாதிங்க சுரண்டிரானுங்களே!

அசோகன், சிங்கப்பூர்2 Days ago
இன்னிக்குத்தான் 'மின் கட்டண' உயர்வு அறிக்கை வந்தது - இது காலையில் பரபரப்பு செய்தி...
சசிகலாவை ஜெயா மன்னித்துவிட்டார் - இது மாலையில் பரபரப்பு செய்தி...
ஆகமொத்தம் தமிழன் காலை செய்தியை மறந்துவிட்டு, மாலை செய்தியில் மூழ்கிவிட்டான்...
உண்மையிலேயே ஜெயா திறமையானவர்தான்...

சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன் 2


நியாயம் கேட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இது.  நடுரோட்டில் ஒரு டிஎஸ்பி அதை செய்திருக்கிறான். அவனுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவன் எவன்யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்கிற தைரியமும், தெனாவெட்டும் அவனுக்கு எப்படி வந்தது? இப்படிப்பட்ட வெறிநாய்களுக்கு காவல்துறை உடையை யார் வழங்கியது?

இந்த தேசத்தின் பிரஜைகளுக்கு அதிகார வர்க்கமும், அமைப்பும் கொடுக்கிற பதிலாக இதுதான் இருக்குமென்றால், அதைப் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கிற  இந்த அரசுகளை யார் தூக்கில் போடுவது?

படித்தவர்களுக்கே இந்த கதியென்றால், படிக்காத எம் நாட்டின் சாதாரண மனிதர்களை வெறி பிடித்த ஏவல் நாய்கள் என்ன பாடுபடுத்தும்?

இந்தக் கேள்விகளுக்கு பதிலும் ஒரு கேள்விதான். அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

அரசு விசாரிப்பது இருக்கட்டும். முதலில் மக்கள் நாம் விசாரிப்போம்.
kashyapan says:
மாதவ் ஜி அவர்களே! ஆசிரியர்கள், தொழிற் சங்கங்கள், அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள்,தலித் தலைவர்கள்,வாயில் கொழுக்கொட்டையை வைத்திருக்கிறார்களா? பொங்கி எழுந்திருக்க வேண்டாமா?---காஸ்யப

eswaran says:
வரிப் பணத்தில் வயிற்றை கழுவும் இது போன்ற நன்றி கெட்ட போலீஸ் மிருகங்களை செருப்பால்அடி கொடுக்க வேண்டும்.

தினமலர்


தினமலரில் படித்த இரு செய்திகள் இரண்டும் எதையோ உங்களுக்கு நினைவு படுத்தினால் நான் பொறுப்பால்ல

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா
கொத்தடிமைகளை மீட்க கோரிக்கை 

We connect Donors and NGOs





-    http://www.vdonate.org/about_fund_raising_portal.html

World Autism Awareness Day April 2


Workshop on World Autism Awareness Day


National Trust is organizing a workshop on World Autism Awareness Day (WAAD) on 2nd April'2012 at India International Centre in the Multipurpose Hall, New Building, 40 Max Mueller Marg, New Delhi-110003 from 2pm to 5pm.Hon'ble Union Minister for Commerce & Industry Sri Anand Sharma will inaugurate the workshop. Hon'ble Union Minister, Ministry of Social Justice & Empowerment would preside over the workshop. All of you are cordially invited in the event. National Trust has launched its web portal for receiving donation. The donors may donate on this occasion. Please click here  for making donation. 

சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன்!


Thiyagarajan1 Days ago
"போலீஸ் இல்லை நான் ! ஒரு பொறுக்கி" என்று நூற்றுக்கு நூறு நிரூபித்துள்ளார் இந்த சந்தன பாண்டியன் ! உனக்கெல்லாம் எதுக்குய்யா இவ்வளவு பெரிய மீசை! மீசையை மட்டும் பெரிசா வைத்துக்கொண்டால் தான் உன்னை மாதிரி ஆட்களையெல்லாம் ஒரு ஆம்பளை என்று உன் மனைவி மக்கள் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம் ! ஆனால் ஒரு அமைதிப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது அதுவும் ஒரு பெண் என்றும் பாராமல் ஒரு ஆசிரியை மீது கைவைத்து கன்னதில் அறைந்து கீழே தள்ளி ! அது என்னய்யா ஒரு பொறுக்கித்தனம்? இத்தனை பேர் டிவி யில் பார்த்துள்ளனர் ! அமெரிக்காவில் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் இருந்து பார்த்த எனக்கே இவ்வளவு ரத்தம் கொதிக்கின்றதே ! அங்கு இந்த அராஜகத்தை நேரில் பார்த்துக் கொண்டு அனுபவித்த ஆசிரியப் பெருமக்கள் அமைதியாக இருந்ததனால் மட்டுமே நீ தப்பித்தாய்! இல்லையென்றால் உன் டவுசர் கழண்டு இருக்கும் ! சீ சீ ! முதலில் உன் மீசையை மழி ஒட்டு மொத்தமாக !

முஹம்மது ரஸ்வி2 Days ago
இவர்களை வேண்டுமானால், காவல்துறை ரவுடிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

ராஜா செழியன்1 Days ago
சந்தான பாண்டியன் அல்ல! சாக்கடை பாண்டியன்!

இப்போதைக்கு இது இன்னும் வரும்

இந்தியாவின் சாபக்கேடு கிரிக்கெட்


போதும், போதும் என்கிற அளவிற்கு இந்த கிரிக்கெட் காய்ச்சல் அனைவருக்கும் பரவிவிடும். பிடிக்காதவர்களையும் படுத்தி எடுத்துவிடும்."ஸ்கோர்' என்ற வார்த்தையால் கொன்று எடுத்துவிடுவார்கள். கடமைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, உழைப்பை வீணடித்தபடி வீட்டின் தொலைக்காட்சியில் மொத்தகூட்டமும் முடங்கிப்போகப் போகிறது.இது பெரிய குற்றம் என்றால் கடமையை, வேலையை செய்யப்போன இடத்தில்,"டிவி' யிலும், கம்ப்யூட்டர் திரையிலும் கிரிக்கெட் பார்ப்பது குற்றத்திலும் கொடியது, துரோகத்தில் சேர்த்தி. இந்த குற்றத்தையும், துரோகத்தையும் எந்தவித மனசஞ்சலமும் இல்லாமல் செய்ய, மொத்த கூட்டத்தையும் மூளைச்சலவை செய்து தயாரக்கி வைத்தாகிவிட்டது. இதை விமர்சிப்பவன்தான் இன்றைய காலக்கட்டத்தில் கோமாளியாக சித்தரிக்கப்படுவான்.

படித்ததில் பிடித்தது


ஜெர்மானியத் தொழில்நுட்பம் அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் http://muralikkannan.blogspot.in/2012/03/blog-post_12.html
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது.

Sunday, April 1, 2012

இந்த முறையாவது வெற்றி பெறுமா கூகுள்?

கூகுள் நிறுவனம் தனது புதிய முயற்சியாக டேப்லட் கம்யூட்டர் விற்பனையில் இறங்க உள்ளது. ஆப்பிள் மற்றும் அமோசான் போட்டிகளை சமாளிக்கும் விதமாக இம்முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. ஏற்கனவே 2010ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் இறங்கி காயப்பட்டு திரும்பியது. 

ஆன்லைன் மூலம் நேரடி விற்பனைக்கு தயாராகி வரும் கூகுள். இந்த முறையாவது வெற்றி பெறுமா?

எம்.பி

துருக்கி ஆளும் மற்றும் எதிர்கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக கடமை ஆற்றுகிறார்கள்.
நம்ம எம்.பி க்களின் சண்டையை பார்த்து பார்த்து மனம் வெதும்பி நு£டுல்ஸ் ஆன இதயங்களுக்கு இந்த படம் ஒரு சிறிய ஆறுதல்

ப்ளட் சுகர் குறைய

3000 நபர்களிடம் ஆய்வு செய்ததில் தண்ணீர் அதிகம் குடித்தவர்களின் பிளட் சுகர் அளவு குறைவாக இருந்துள்ளது. உடலில் நீர் அளவு குறையும் போது மனித உடலில் உள்ள ஒரு ஹார்மோன் பிளட் சுகர் அளவை கூட்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு ஒரு ஆரம்ப நிலையில் தான் உள்ளது என்றாலும், இப்போது கோடை காலத்தின் ஆரம்பத்தில் நாம் உள்ளோம், ஆனால் மிக கடுமையான வெப்பம் மக்களை தாக்கி வருகிறது. எனவே சக்கரை  நோயாளிகள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது நலம். 

ஜாக்பாட் 656மில்லியன் டாலர்


லாட்டரி உலகில் மிகப் பெரிய பரிசு தொகை 656 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு பணம் நேற்று 3 நபர்களுக்கு கிடைத்துள்ளது. முகம் தெரியாத அந்த 3 நபர்கள் யாரோ-? ஆனால் படத்தில் உள்ள பெண்மணி அந்த அதிர்ஷ்ட லாட்டரியை விற்ற பெண்மணி.  4000 க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு குக்கிராமதில் அந்த பெண்மணி நடத்தி வரும் ஒரு சிறிய பெட்டிக்கடையில் தான் இந்த சீட்டு விற்கப்பட்டுள்ளது. பரிசுக்குரிய லாட்டரி சீட்டை விற்பனை செய்ததன் மூலம் இப் பெண்மணிக்கு கிடைக்கும் கமிஷன் தொகை 500,000 அமெரிக்கன் டாலர்.

Saturday, March 31, 2012

ஒரு" உவ்வே" செய்தி


கோழி முட்டைகளில் எத்தனை வகைகள் உள்ளன தெரியுமா-? கேஜ் பிரி , பிரி ரேன்ஜ் ,ஊட்டசத்து செறிவூட்டப்பட்ட முட்டை, ஆர்கானிக் முட்டை, ஏன் சைவ முட்டை எனபலவகைகள் உள்ளன.
அதென்ன சைவ முட்டை என்கிறீர்களா? ஆம், எந்தவிதமான அசைவ பண்டங்களும் கலக்காது உள்ள கோழி தீவனங்களை மட்டும் உண்ணும் கோழிகள் இடும் முட்டை சைவ முட்டை எனப்படும்.
ஓமேகா&3 முட்டை இது கடல் உணவுகளில் மட்டும் கிடைக்கும் சத்தான ஒமேகா&3 அடங்கியது.
இதெல்லாம் இருக்கட்டும்ங்க .. .. .. சீனாவில் மிகப் பிரபலமான ஒரு முட்டை ரெசிபியை பின்வரும் இணைப்பை சொடுக்கி பாருங்களேன். குறிப்பு: சாப்பிட்டவுடன் இதனை பார்க்காதீர்கள்.



தகவல் அறியும் சட்டம்


     தகவல் அறியும் சட்டம் பொது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அரசு அலுவலகங்களில் தங்களுக்கு வேண்டிய நிவாரணம் பெற மிக எளிய வழி இது. தாங்கள் கேட்கும் விபரங்களை சம்பந்தபட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தங்களுக்கு தர கடமைப்பட்டுள்ளார். இதை மீறும் அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் வழி உள்ளது. 

       நாம் நமக்கு தேவையான விபரங்களை எப்படி கேட்பது-? அதற்கு என்ன கட்டணம்? எத்தனை நாட்களில் பதில் கிடைக்கும்? பதில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்பதில் இருந்து நமது மனு எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்து கொள்ள மற்றும் பல பல விசயங்களை இங்கு காணலாம்.

      ஓரே ஒரு குறை, இது தமிழ்நாடு அரசு இணையதளம் ஆனால் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. அரசு இதனை கவனித்தால் நல்லது.

மொபைலில் தமிழ்

தமிழ் தேடு பொறி

தமிழில் தட்டச்சு செய்து இணையத்தில் கலக்கலாம் வாங்க இங்கே
http://kandupidi.com/index.php

இணையத்தில் தமிழ், இதயங்கள் இணைய

தமிழில் இணையதளங்களில் உலா வர உதவும் இதனை பயன்படுத்துங்களேன்.
http://kandupidi.com/converter/