Saturday, April 14, 2012

சிந்தியுங்கள்...!

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி''


பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இளவயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.
 இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!
 காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.
 ""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

Friday, April 13, 2012

சித்திரை 1


தமிழ் மகளே வருக! வளம் எல்லாம் தருக!!Thursday, April 12, 2012

டைட்டானிக் - 100


டைட்டானிக் கப்பலினை பற்றிய சில அரிய புகைப்படங்கள்
1912 ஏப்ரல் 15ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து நியூயார்க் சென்ற போது தனது முதல் பயணத்திலேயே விபத்துகுள்ளாகி முழ்கி போனது. கப்பலில் 2224 பேர் சென்றதில் 1514 பேர் உயிரிழந்தனர்.

இக்கப்பல் கட்டி முடிக்கப்பட்டு 2 ஏப்ரல் 1912ல் அன்று தான் கடலில் டிரையல் பயணம் செய்தது. 10 ஏப்ரல் 1912, முதல் பயணத்தை ஆரம்பித்து 15 ஏப்ரலில் விபத்துக்குள்ளாகி முழ்கியது.

டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை ஆரம்பித்த சில விநாடிகளிலேயே அது ஒரு விபத்தை சந்தித்து தப்பியது. அது புறப்பட்ட போது அருகில் இருந்த இரு சிறிய கப்பல்கள் டைட்டானிக்கோடு மோத இருந்தது. இரண்டுக்கும் இடையே 4 அடி வித்தியாத்தில் தப்பியது. இதனால் டைடானிக்கின் முதல் பயணம் தடுதலையோடு 1 மணி நேரம் தாமாதமாக ஆரம்பித்தது.

2224 பயணிகளுடன் 10 ஏப்ரல் 1912 தேதி சௌதாம்டன் துறைமுகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கும் முன் எடுத்தது.

கலிபோர்னியன் கப்பல் பனி மலையை கண்டு நடுக்கடலில் நின்றது. டைட்டானிக் அதன் வழியே செல்வதை கண்டு அதற்கு பனி மலையை பற்றி எச்சரிக்கை செய்தது. ஆனா£ல் டைட்டானிக் கப்பல் அதனை கண்டு கொள்ளவில்லை.

கடைசி லைப்போட் மூலம் தப்பித்து வந்தவர்கள்.

உயிர் தப்பியவர்களின் பட்டியலை பார்வையிட குழுமிய மக்கள் கூட்டம்.


டைட்டானிக் கப்பல் மோதிய பனிபாறை இதுவாகத் தான் இருக்கும் என நம்பபடுகிறது.விபத்து நடந்து ஐந்து நாட்கள் கழித்து எடுத்தப் படம்.

டைட்டானிக் முழ்கியதை பற்றிய இத்தாலிய பத்திரிக்கை செய்தி.

நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கை

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை

தற்போது டைட்டானிக்
டைட்டானிக் கப்பல் தனது பயணத்தை தொடங்கி (முடித்து) 100 ஆண்டுகள் ஆகிறது


 "2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய மாட்டேன்

"முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. அந்தக் கொள்கையைப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன. இதில் ஆ. ராசாவுக்குச் சமமாக ப. சிதம்பரத்துக்கும் பங்கு உள்ளது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அது பற்றி நான் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாதிடுவேன். 2ஜி வழக்கில் சிதம்பரத்தை எதிரியாகச் சேர்க்கும் வரை ஓய மாட்டேன்'' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்

Wednesday, April 11, 2012

'Padmasri’ Former


'அதி நவீன ஆராய்ச்சிக் கூடங்களில், கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து, பல பட்டங்கள் பெற்ற விஞ்ஞானிகளைக் கொண்டுதான் புதியனவற்றைக் கண்டு பிடிக்க முடியும்’ என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் கூற்றைத் தவிடு பொடியாக்கி இருக்கிறார், புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த விவசாயி வெங்கடபதி. கனகாம்பரம், சவுக்கு போன்ற பயிர்களில் புதிய ரகத்தைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியதால் இவருக்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, 'பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார், இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்.