Wednesday, April 4, 2012

50 கோடி பரிசு



syed

ஹபீஸ் சயீத் என்ற நபரை பற்றிய செய்தி யாருக்கேனும் தெரிந்தால் அவர்களுக்கு 50 கோடி பரிசு காத்திருக்கிறது. அதுவும் அமெரிக்க டாலர்களாகவே தரப்படும்.

பாகிஸ்தானில் பொதுக்கூட்டங்கள் போட்டு பேசும் இவனை
அப்போதெல்லாம் ஒன்றும் கண்டுக்காமல் இருந்த அமெரிக்க அரசு இப்போது இது போல் ஒரு அறிவிப்பை செய்தள்ளது. பாகிஸ்தானில் சுதந்திரமாக திரியும் இவன் ரமலான் மாதத்தில் எந்த தீவிரவாத அமைப்பும் நன்கொடை வசூலிக்க கூடாது என பாகிஸ்தான் அரசு அறிவித்த போதும், சுமார் 40,000 பேர் கூடிய கூட்டத்தில் இவன் பேசி நன்கொடை வசூலித்தான்.

அப்போது இந்தியாவிற்கு எதிரான ஜம்ஜக்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் இருந்து எங்களின் பணி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நல்லபடி நடக்க நன்கொடை தாருங்கள் என பேசி நன்கொடை வசூல் செய்தான். அதனை உலக நாடுகளில் பல டி.விக்களும் ஒலிபரப்பினர். அப்போதெல்லாம் விட்டு விட்டு இப்போது அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு கூட இந்திய அரசுக்கோ யாருக்கும் தெரியாது. அமெரிக்க வெளியுறவு அரசியல் விவகார துணை அமைச்சர் வெண்டி ஷெர்மான் இப்போது இந்தியா வந்துள்ளார். அப்போது நமது பத்திரிக்கை நிருபர்கள் அவரை பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என் வினவிய போது தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளதை சொல்லியுள்ளார்.

இதற்கு பிறகு தான் இந்திய வெளியுறவு துறையும் சிதம்பரமும் இதனை வரவேற்று அறிக்கை வெளியிடுகிறார்கள். இந்திய அரசு தேடி வரும் ஒரு தீவிரவாதியை பிடிக்க அமெரிக்கா செய்த அறிவிப்பு இந்தியாவிற்கும் உலகிற்கும் தெரியவே இல்லை என்று தானே அர்த்தம்.
இந்த அறிவிப்பு பற்றி தெரிந்த பாகிஸ்தான் அரசு, பின்லேடனை தாக்கி கொன்றதை போல இவனை அமெரிக்க அரசு கொன்று விடக் கூடாது என தற்போது இவனுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது.

இந்த அறிவிப்பை உண்மையிலேயே அமெரிக்க அரசு செயல்படுத்துமா? அல்லது நம்மூர் அரசியல்வாதிகளின் அறிக்கை போல தானா எனத் தெரியவில்லை.


No comments:

Post a Comment