Tuesday, April 10, 2012

மின் கட் டணம் இந்த மாதம் எப்படி கணக்கிடப் படுகிறது


வீடுகளுக்கு மின் கட் டணம் இந்த மாதம் எப்படி கணக்கிடப் படுகிறது என்று அதி காரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.


ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு 2 மாதங் களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.

2 மாதங்களுக்கு மின் கட்டணம் மீட்டர் கணக் கிடுவதில் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை கணக்கிட்டதில் 360 யூனிட்டுகள் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த பயன்பாடு 60 நாட்களுக்குரியது. 

அப்படியானால் சராசரியாக ஒரு நாளைக்கு 6 யூனிட் ஆகிறது. அப்படியென்றால் ஏப்ரல் மாதத்தில் 5 நாள்களுக்கு 30 யூனிட் ஆகிறது. மீதி 330 னிட், கட் டணம் உயர் வதற்கு முந்தைய மின்சார பயன்பாடு ஆகும்.

எனவே, 330 யூனிட்டுகளுக்கு பழைய கட்டண முறைப் படியும், ஏப்ரல் மாதம் பயன்படுத்திய 30 யூனிட்டுகளுக்கு புதிய கட்டண விகிதப்படியும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கணக்கீடுக்கான புதிய மென்பொருள் மின் கட்டணம் செலுத்தும் மய்யங்களில் உள்ள கம்ப்யூட் டரில் நிறுவப்பட்டுள்ளது.

அதேசமயம் உயரழுத்த தொழிற் சாலைகளில் ஏப்ரல் 1ஆம் தேதி மின்சார அளவை கணக்கிடும் படி உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment