Tuesday, April 10, 2012

இன்ப அதிர்ச்சி கொடுத்த குற்றாலம் அருவிகள்.

குற்றாலம்: குற்றாலத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று அதிகாலையில் குறைந்ததை அடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது..

தென்காசி, குற்றாலம் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலம் என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது.

குற்றாலம் மற்றும் தென்காசி நகரங்களில் ஒரு துளி மழை கூட விழாத நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் ஐந்தருவி, மெயினருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை வெள்ளப்பெருக்கு தணிந்த நிலையில் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. வறண்டுபோய் கிடந்த பாறைகளை வெறுமையோடு பார்த்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தது குற்றாலம் அருவிகள்.

No comments:

Post a Comment