Tuesday, April 10, 2012

அரசு ஊழியர்கள் நினைத்தால் தமிழகம் ஒளிரும்


இந்தியாவின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் மேன்மேலும் உயர மின்சாரம் தேவை. நமது இந்திய அரசு அணு மின்சாரத்தில் அதிக நாட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. காரணம், தட்டுபாடற்ற மூலப்பொருள். நீர் மின்சாரத்திற்கு அல்லது அனல் மின்சாரத்திற்கு வேண்டிய நீரும் நிலக்கரியும் பற்றாக்குறை, விலை உயர்வு மற்றும் போக்குவரத்து சங்கடங்கள் பல பல தொல்லைகள் உள்ளன. 


ஆனால் அணு மின்சார உற்பத்தியை நாட்டின் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். நீர் மின்சாரம் போல் அணைக்கட்டு, ஆறு, மலை என தேடிச் செல்லாமல் மற்றும் அனல்மின் நிலையங்களை துறைமுகங்கள் அருகில் அல்லது சுரங்கங்கள் அருகில் தொடங்க வேண்டியுள்ளது. அது போல் அல்லாது அணு மின்சாரத்தை நாட்டின் எந்த இடத்திலும் தொடங்க இயலும். 

மேலும் பிற மின்உற்பத்தியை விட இதற்கு தொடக்க நிலையில் குறைந்த அளவே பணம் தேவை. ஆனால் இதன் கழிவை பாதுகாக்க செலவிடப் போகும் தொகையை கணக்கில் காட்டாது கூறப்படும் கூற்று இது. என்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த மாதிரி திட்டங்களை கைவிட்டு சூரிய ஒளி மின்சாரத்திற்கு இந்த அரசு ஏன் முக்கியத்துவம் தர மறுக்கிறது எனத் தெரியவில்லை. அணு மின்சார உற்பத்தி போல இதனை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடங்க இயலும். மேலும் பெரிய அளவில் உற்பத்தி என்று இல்லாமல் அவரவர் தேவைக்கு அவரவரே உற்பத்தி செய்து கொள்ள இயலும் என்பது இதில் உள்ள மிகப் பெரிய நன்மை.

குறிப்பாக இருண்டு கிடக்கும் தமிழ்நாட்டில் இன்று அரசு ஊழியர்கள் வீட்டில் சந்தோசம். காரணம் சம்பள உயர்வு. இது அரசுக்கு ஓராண்டுக்கு 1400 கோடி ஆகும்.

ஐயா ஒரு நிமிடம் யோசித்தால் இந்த 7 சதவீத உயர்வு இல்லாது அரசு அலுவலர் எவரேனும் கஷ்டப்படுகிறார்களா என்றால் இல்லவே இல்லை என்பது தான் உண்மை. எனவே இந்த 1400 கோடி ரூபாய்க்கு ஒரு கார்பரேஷனை நிறுவி அதன் மூலம் மின் உற்பத்திக்கு வழி ஏற்படுத்தி இருக்கலாமே. அரசு ஊழியர்களுக்கு அவரவர் ஈவுப்படி பங்குதாரர்களாக ஆக்கி விடலாம். 

அல்லது 1400 கோடி ரூபாய்க்கு அரசு அலுவலர்களின் இல்லங்களில் சூரிய ஒளி மின்சாரத்திற்கான சாதனங்களை அரசு அளித்திருக்கலாமே.

எத்தனையோ சாலைகள், இரயில்வே மின்மயமாக்கல் மற்றும் புது வழித் தடங்கள் என ஏதாவது ஒரு திட்டத்தை இந்த 1400 கோடி ரூபாய்க்கு ஒவ்வொவரு வருடமும் செய்து அரசு ஊழியர்களை பங்குதாரர்களாக்கி நாட்டையும் அரசு ஊழியர்களையும் வளப்படுத்தலாமே. வருடா வருடம் இல்லாவிட்டாலும் ஒரு வருடம் இது போல செய்து பார்க்கலாமே.

1 comment:

  1. எங்க சார் அரசு ஊழியர்களுக்கு தான் இந்த அரசு ...

    மற்றவர்கள் அகதிகள்

    ReplyDelete